top of page

தமிழ் ஆபீஸ் மாதக் காலண்டர் 2027 ஒரு கட்டுரை

Aug 22
3 min read

Updated: Aug 23

அன்புடையீர், 


வணக்கம் நான் கடந்த 46 வருடமாக இந்த விளம்பர காலண்டரில் உங்களுக்கு இதுவரை சேவை செய்திருக்கிறேன். மாதக் காலண்டரில் மட்டும் குறிப்பாக பல புதுமைகளை ஒவ்வொரு வருடமும் நான் உங்களுக்கு படைத்திருக்கிறேன். கீழ்க்கண்ட விவரங்கள் நீங்கள் படித்து பார்த்தால் என்னை கண்டிப்பாக திரும்பி பார்ப்பீர்கள். 

காலண்டர் என்பது ஒரு இலவச விளம்பரப் பொருள் அல்ல... உங்கள் வணிகத்தின் ஆண்டு முழுவதும் செயல்படும் விளம்பரம்!

ஒரு காலண்டர் என்பது ஒரு இலவச விளம்பரப் பொருள் அல்ல. அது உங்கள் நிறுவனத்தின் பெயரையும், தரத்தையும், நம்பிக்கையையும் 365 நாட்கள் வாடிக்கையாளர்களின் பார்வையில் வைத்திருக்கும் சக்திவாய்ந்த விளம்பர கருவியாகும்.

வைஷ்ணவி புதுமுகம் பிராண்ட், காலண்டர் சந்தையில் புதிய வடிவமைப்பு, நவீன நிறத் தேர்வு மற்றும் உயர்தர அச்சுத் தரத்துடன் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறது.

இன்றைய வாடிக்கையாளர்கள் அழகான, புதுமையான வடிவமைப்புகளையே விரும்புகிறார்கள். எனவே, சமீபத்தில் உள்ள டிசைன்களையும் கவர்ச்சிகரமான நிறங்களையும் தேர்வு செய்தால், உங்கள் காலண்டர் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரியும்.

மாதக் காலண்டர் தமிழ்


எங்களின் முக்கிய நோக்கம் ஒன்றே...

உங்கள் வாடிக்கையாளர்கள் மாதக் காலண்டர் 2027 காலண்டரை தனது வீடு, அலுவலகம் மற்றும் கடையில் ஆண்டு முழுவதும் மாட்டி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த காலண்டரின் உண்மையான நோக்கம் நிறைவேறுகிறது. உங்கள் பிராண்டும் தினமும் அவர்களின் கண்முன்னே இருக்கும்.

எனவே, காலண்டர் டிசைனை தேர்வு செய்யும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். விலையை மட்டும் அல்ல, உங்கள் பிராண்டின் மதிப்பையும் உயர்த்தும் சரியான டிசைனை தேர்வு செய்யுங்கள்.

உங்கள் வணிகத்திற்கு தனித்துவமான அடையாளம் தருவது- வைஷ்ணவி புதுமுகம்

ஓம் சக்ரா பிராண்ட்

நான் ஓம் சக்ரா பிராண்ட் என்ற பெயரில் எல்லா சைஸ்களிலும் அறிமுகம் செய்திருக்கிறேன். ஓம் பிராண்ட் என்றால் நாம் அனைவரும் அறிந்துள்ள டிசைன்கள், சைஸ்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

வைஷ்ணவி புதுமுகம் பிராண்ட்

வைஷ்ணவி பிராண்ட் என்றால் அனைத்தும் அதாவது பேப்பர், சைஸ், ஜெர்மன் மை, (Ink) பேப்பர் திக்னஸ் என்று அனைத்தும் மாறுபட்ட டிசைன்களாக அமைத்துள்ளேன். விலை அதற்காக எதுவும் கூட்டவில்லை. அனைத்தும் 5 கலர்களில் இருக்கும்.



3 கலர் சீட்டர்கள்

ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மை பேஸ்ட்டுகள் வைத்து பல புதுமையான கலர்களில் பிரிண்ட் செய்துள்ளது. எதிர்காலத்தில் 2 கலர் சீட்டர்களுக்கு பதில் இந்த 3 கலர் சீட்டர்கள் 2 கலர் சீட்டர்களுக்கு இணையாக விற்பனை ஆகும். இதில் மாற்றம் இல்லை.

70 GSM மற்றும் 75 GSM மேப்லித்தோ பேப்பர்

மேப்லித்தோ காலண்டர்கள் அனைத்தும் திக்னஸ் மிக அதிகமாக இருக்கும். பேப்பர் நிறம், திக்னஸ் வேறு எங்கும் என்னிடம் உள்ளது போல் கிடைக்காது. எங்கள் பேப்பரை பார்த்து விட்டு கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மார்க்கெட் லோக்கலில் வாங்காமல் எங்களிடம் வாங்குகிறார்கள்.

130 Gsm முன் பின் (Front & Back) காலண்டர்கள்

எங்களுடைய காலண்டர்கள் எந்த டிசைனாக இருந்தாலும் அந்த டிசைன் 130 GSM முன் பின் கிடைக்கும். குறைந்தது 500 காலண்டர் ஆர்டர் கொடுக்க வேண்டும்.

100 GSM - 110 GSM ஆர்ட் பேப்பர்

ஆர்ட் பேப்பர் நாங்கள் 100 Gsm தான் சப்ளை செய்கிறோம். ஆனால் அந்த பேப்பர் மிகவும் திக்காக இருக்கும். தமிழ்நாட்டில் அது போல எங்கும் கிடைக்காது. ஆர்ட் பேப்பர் எங்கள் பேப்பரை பார்த்து விட்டு கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மார்க்கெட் லோக்கலில் வாங்காமல் எங்களிடம் மட்டும் வாங்குகிறார்கள்.

தமிழ் தினசரி காலண்டர்கள்

எங்களுடைய வாடிக்கையாளர்கள் ரொம்ப வருடமாக என்னிடம் கேட்டுக் கொண்டபடி தமிழ் தினசரி காலண்டர் அப்படியே தத்ரூபமாக தினசரி காலண்டர் மாதிரியாக மாதம் ஒருமுறை கிழித்தால் மட்டும் போதும் என்ற முறைப்படி படைத்திருக்கிறோம்.

16 x 22 மற்றும் 22 x 32

இந்த சைஸ் 16 x 22 மற்றும் 22 x 32 சைஸ் காலண்டர்கள் 15 x 20 மற்றும் 20 x 30 சைஸ் காலண்டர்களுக்கு மாற்று ஏற்பாடாக 5 கலரில் பிரிண்ட் செய்து உங்களுக்கு கொடுக்கிறோம். அதற்குரிய விலையை நீங்கள் நன்றாக கவனித்தால் 15 x 20 சைஸ் மற்றும் 20 x 30 சைஸ் விலைகளை விட கூடுதலாக வித்தியாசம் இருக்காது. பேப்பர் திக்னஸ் கூடுதல் மற்றும் சைஸ் பெரியது என்றால் உங்கள் வாடிக்கையாளர்கள் மாற மாட்டார்கள்.

விளம்பரம் பிரிண்ட் செய்ய கூடுதல் இடங்கள் (முன் பின் மாதம் நடுவில் உள்ள இடம்)

இந்த ஆண்டு 15 x 20 , 17 x 27, 20 x 30 சைஸ் காலண்டர்களில் டாப் விளம்பரம் வழக்கமான அளவுகளை விட கூடுதலாகவும் முன் பின் மாதங்கள் நடுவில் உள்ள இடங்கள் வழக்கமான அளவுகளை விட கூடுதலாகவும் சில டிசைன்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அந்த டிசைன்களை ஆல்பத்தில் நீங்கள் சரிபார்த்து அல்லது ஒரு நகல் காப்பி ஒரு காலண்டர் தாள் எங்களிடம் கேட்டு வாங்கியபயன் பெற வேண்டுகிறோம்.

கஸ்டமைஸ்டு காலண்டர்

பார்ட்டிகள் அவர்கள் சொந்த விருப்பப்படி காலண்டர் பிரிண்ட் செய்ய விரும்பினால் தமிழ்நாட்டில் உள்ள எந்த டிசைன்கள் வேண்டுமானாலும் எங்களுக்கு அனுப்பினால், அட்வான்ஸ் தொகை 12,000 சேர்த்து அனுப்பி விட்டால் நாங்கள் உடனே கம்ப்யூட்டரில் டைப் செய்து உங்களுக்கு புரூப் அப்ரூவலுக்கு அனுப்பி வைக்கிறோம். அதற்கு நெட் ரேட் விலை நாங்கள் தருகிறோம்.

ரெடிமேட் ஸ்பெஷல் காலண்டர்

  • ஆர்ட் பேப்பர் டிசைன் நம்பர்கள் : 6032, 6034, 6090, 6092, 6152, 6154

  • மேப்லித்தோ பேப்பர் டிசைன் நம்பர்கள் : 8058, 8060, 8132, 8134, 8196, 8198

    இந்த டிசைன்கள் அனைத்தும் மாதக் காலண்டர்கள் டைப் செய்து ரெடி ஆக இருக்கும். உங்களிடம் இருந்து அட்வான்ஸ் பணம் 12000 வந்தபிறகு மீதம் இடத்தில் மாதிரியில் உள்ளபடி ஸ்பெஷலாக உங்கள் விளம்பரம் கொடுத்தால் அதை நாங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்து புரூப் அப்ரூவல் வாங்கி காலண்டராக சப்ளை செய்து விடுவோம். குறைந்தது 500 காலண்டர் ஆர்டர் கொடுக்க வேண்டும்.

புது புது மொட்டைகள்

வழக்கமாக நான் 15 x 20 , 17 x 27 மற்றும் 20 x29 சைஸ் காலண்டர்களில் மொட்டை டிசைன்கள் முந்தைய ஆண்டுகளில் நான் உங்களுக்கு சப்ளை செய்திருக்கிறேன். ஆனால் பழைய மொட்டை டிசைன்கள் அப்படியே எங்களிடம் கிடைக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் நிறைய வாடிக்கையாளர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மொட்டை கீழ்ப்பக்கம், மேல்பக்கம் ஆக இரண்டு பக்கமும் விளம்பரம் மேட்டர் அளவு பிரிண்ட் செய்ய அதிக இடங்கள் கொடுத்து காலண்டர் உற்பத்தி செய்திருக்கிறோம். எனவே என்னுடைய வாடிக்கையாளர்கள் ஒரிஜினல் மொட்டை தாள் ஒன்று எங்களிடம் கேட்டு வாங்கி வாடிக்கையாளர்களிடம் காண்பித்து ஆர்டர்கள் அதிகம் பெற வேண்டுகிறோம்.

மாதக் காலண்டரில் டாப் விளம்பரம் அதிக இடங்கள் சில டிசைன்களில் உள்ளது.

15 x 20, 17 x 27, 20 x29 அனைத்து டிசைன்களும் வழக்கம் போல் டாப் விளம்பரம் செய்ய பழைய ஒரே அளவு இடம் உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் ஒரு சில டிசைன்கள் மட்டும் டாப் மேட்டர் அளவு வாடிக்கையாளர்கள் வேண்டுகோளை ஏற்று பிரிண்டிங் அளவு உயரத்தில் கொஞ்சம் கூட்டி தயார் செய்திருக்கிறோம். இதையும் நம் டீலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முக்கிய குறிப்பு: என்னுடைய மேப்லித்தோ சாதா பேப்பர் ஒரு பேப்பரையும் மற்றும் ஆர்ட் பேப்பர் ஒரு பேப்பரையும் உங்கள் கையில் எடுத்து பார்க்க மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள:

46 வருடமாக உங்களுக்கு சேவை செய்யும் S.K. கணேசன்

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page